2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் மாதத்தில் அதிகளவு தேயிலை உற்பத்தி

A.P.Mathan   / 2013 மே 27 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாற்றில் அதிகளவான தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் தேயிலை முகவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 33.5 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்ததுடன், இலங்கை தேயிலை உற்பத்தி வரலாற்றில் இதுவரை பதிவாகியிருந்த தொகைகளில் இது மிகவும் உயர்வானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவாகியிருந்த 32.2 மில்லியன் கிலோ கிராம் சாதனை மிகுந்த தொகையாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த தொகை 30.05 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவு 115.04 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்ததுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10 மில்லியன் கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் நிலை மற்றும் மத்திய நில தேயிலை உற்பத்தி பெருமளவு அதிகரித்து காணப்பட்டதுடன், தாழ் நில தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .