2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கொரிய நாட்டின் வர்த்தக தூதுக்குழு ஜூன் மாதம் இலங்கை விஜயம்

A.P.Mathan   / 2013 மே 28 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரிய நாட்டைச் சேர்ந்த வர்த்தக தூதுக்குழு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அதன்போது இலங்கையிலுள்ள தமது வர்த்தக பங்காளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இவ்வாறு வருகை தரும் வர்த்தக தூதுக்குழு, இலங்கையில் மதுபானம், கப்பல் நிர்மாணம் மற்றும் பராமரிப்பு, உருக்கு இரும்பு, சுற்றுலா, வாகன உதிரிப்பாகங்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணம் போன்ற துறைகளில் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாக வர்த்தக சம்மேளனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 
ஜூன் 7ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்த தூதுக்குழுவின் தலைவராக கொரியாவின் புசான் நகரிலுள்ள இலங்கை விவகாரங்களுக்கான தலைவரான ஷிங் ஜுங் டயெக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரசபையின் அங்கத்தவர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2012ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது விடுத்த வேண்டுகோளுக்கிணங்கள் இந்த வர்த்தக தூதுக்குழு இலங்கை விஜயத்தை தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .