
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் 2012ஆம் ஆண்டிற்கான 'A Transformative Spirit' ஆண்டறிக்கையானது உலகளாவிய ரீதியில் 11ஆம் இடத்தினையும், The League of American Communications Professionals(LACP) இன் 2012/13 Spotlight விருதுகளுள் பிளாட்டினம் விருதினையும் வென்றுள்ளது. இந் நிகழ்வில் Cisco System, Intel Corporation மற்றும் Credit Suisse போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு 100 இற்கு 99 புள்ளிகளை பெற்று இப் பெருமைக்குரிய விருதினை ஜனசக்தி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. LACP ஆனது பொருளாதார நிலைமைகளை எதிர்த்து மிதமிஞ்சிய தொடர்பாடல் கூறுகளை வெளிப்படுத்திய ஜனசக்தி நிறுவனத்தினை பாராட்டியது.
'இவ்வருட நிகழ்வில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் 2012ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையானது குறிப்பிடத்தக்க கடும் போட்டியை வழங்கியிருந்தது' என LACP இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டீன் கெனடி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 2012/13 Spot Light விருதுகளிற்கு சுமார் பன்னிரண்டு நாடுகள் மற்றும் 200 நிறுவனங்களிடமிருந்து 800 க்கும் அதிகமான சமர்பித்தல்கள் கிடைக்கப் பெற்றன. ஒட்டுமொத்தமாக 100 இற்கு 99 மதிப்பெண்களை பெற்ற இப்பணியை சிறப்புமிக்கதாக கருதினோம். இத் திட்டத்தின் ஊடாக பொருத்தமான நபர்களுடனான தொடர்பு, மிகப் பொருத்தமானதும், சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாகவும்; இலக்கு பார்வையாளர்களை கவர முடிவதுடன், இத்திட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமையும் என நாம் நம்புகிறோம்' என்றார்.
LAPC விருதுகள் வழங்கும் நிகழ்வில் சர்வதேச ரீதியில் சிறந்த தொலைத்தொடர்பாடல் திறன்களை வெளிப்படுத்துபவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். இப்; போட்டியில் கலந்து கொள்வதற்கு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கும் அதிகமான சமர்ப்பித்தல்கள் கிடைக்கின்றன.
'இப் போட்டிக்கு இணையாக தொடர்ந்தும் நாம் சரியான தகவல்களை சரியான நபர்களிற்கு வழங்குவதில் முனைப்புடன் செயற்படுகிறோம். இதை தவிர, நாம் எமது அடிப்படை மதிப்புகளாகிய வெளிப்படைத் தன்மை, சிறந்த தொடர்பாடல், நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புகள் குறித்த உண்மை நிலைமையை பின்பற்றுகிறோம். இவ் விருது கிடைத்தமைக்கு அதன் உள்ளடக்கம் மற்றும் வழங்கல் (Presentation) போன்றவற்றின் மதிப்பே காரணமாகும் என நான் நம்புகிறேன். நிறுவனம் எனும் ரீதியில், இவ்விருதினை பெற்றமை குறித்து பெருமையடைகிறோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் பொது முகாமையாளர் பர்டேல் பின்டோ ஜயவர்தன தெரிவித்தார்.
LACP இனது தொடர்பாடல்; மற்றும் பிரச்சார சேவைகள் குறித்த முப்பரிமாண ஆய்வுகளிற்கான சேவைகளை வழங்குவதுடன், வலுவான செல்வாக்கினையும் செலுத்தி வருகிறது. ஜனசக்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கையானது அதன் தெளிவான தகவல், சிறந்த விளக்கம், தகவளிற்கு பொருந்தக்கூடிய தனித்துவமான காட்சியமைப்பு, படைப்பாற்றல் மற்றும் அதன் பொருத்தமானத் தன்மை காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
'2012ஆம் ஆண்டிற்கான 'A Transformative Spirit' ஆண்டறிக்கையானது எமது வாடிக்கையாளர்கள், மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் எமது இருப்பினை உடைத்தெறிய முடியாது எனும் தொனிப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. எமது வெற்றி பயணமானது உண்மைத் தன்மை, எளிமை, ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் பொறுப்புடைமை அடிப்படையில் அமைந்துள்ளது' என ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
உள்நாட்டு பெருநிறுவனத்தினை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் transformative spirit தொனிப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையானது Copyline மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் JWT இன் வழிகாட்டல்களின் கீழ் புதிய கூட்டுநிறுவன அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவ் அறிக்கையின் செயல்திறனை அதன் உட்புற காட்சியமைப்பில் காணப்பட்ட வடிவமைப்பின் சுருக்கம் சிறப்புற விளக்குவதாக அமைந்துள்ளது.