2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையுடன் நான்கு உடன்படிக்கைகளில் தாய்லாந்து கைச்சாத்திடும்

A.P.Mathan   / 2013 மே 31 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (31) மேற்கொள்ளும் தாய்லாந்து பிரதம மந்திரி யிங்லுக் ஷினவாத்ரா இலங்கையுடன் சுற்றுலாத்துறை உறவுகள் உடன்படிக்கை உட்பட நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுலாத்துறை மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் ஒன்றிணைந்து செயற்படுவது, புரதான நகரங்களான கண்டி மற்றும் அயுத்தயா ஆகியவற்றுக்கிடையில் தொடர்பை பேணுவது மற்றும் கொழும்புக்கு வருகை தரும் தாய்லாந்தின் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு வீசா விலக்கழிப்புகளை வழங்குவது தொடர்பான உடன்படிக்கைககள் கைச்சாத்திடப்படவுள்ளன.
 
யிங்லுக் ஷினவாத்ராவுடன் வர்த்தக நிபுணர்கள் குழுவொன்றும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வதற்காக வருகை தரவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .