2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

டவ் வர்த்தகநாமத்தின் சிகையலங்கார அணிவகுப்பு

A.P.Mathan   / 2013 மே 31 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


கண்கவரும் ஆடைகள், டாப்ஸ், கைப்பைகள் மற்றும் காலணிகள் கொண்டு தம்மை பல்வேறு வடிவங்களில் அலங்கரித்துக் கொண்ட 48 அழகிய பெண்களின் கூந்தல் அணிவகுப்பு அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான டவ், முன்னணி அழகுகலை நிபுணர் நயனா கருணாரத்ன மற்றும் பிரபல நடன அமைப்பாளர் லோ சிங் வொங் ஆகியோரின் புதிய பாணிகள் மற்றும் ஸ்டைல்கள் உள்ளடங்கிய வகையில் ''Dove Real Women Real Beauty' சிகையலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. Real Women எனும் தொனிப்பொருளிற்கமைய, இந் நிகழ்வில் பங்கேற்ற 48 மாடல்களும் வெவ்வேறு தொழிற்துறையை சேர்ந்தவர்களாகவும், அனுபவமற்றவர்களாகவும் இருந்தமை விசேட அம்சமாகும்.
 
மேலும் இந் நிகழ்வில் டவ் குழுவினர் மூலம் முதற்தடவையாக டவ் ஃபேஸ் வொஷ் (Face Wash) தயாரிப்புகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. டவ் ஃபேஸ் வொஷ் தயாரிப்பிலுள்ள ¼ மொய்சரைசர் மில்க் ஆனது ஏனைய சாதாரண ஃபேஸ் வொஷ்களை விட முகத்திற்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது. சாதாரண ஃபேஸ் வொஷ்கள் உங்கள் முகத்தின் ஈரப்பதனை பேணுகிறது. ஆனால் டவ் ஃபேஸ் வொஷ் ஆனது உங்கள் முகத்தின் எண்ணெய், அழுக்கு போன்றவற்றை நீக்கி சிறந்த பராமரிப்பினை வழங்குகிறது. மொய்சரைசர் மில்க் ஆனது சருமத்தின் உட்புறம் வரை ஊடுருவி சருமத்திலிருந்து மொய்சரைசர் வெளியேறுவதை தடுப்பதுடன், மிக மென்மையான சருமத்தையும் வழங்குகிறது. இப்; ஃபேஸ் வொஷ் தயாரிப்புகள் Beauty Moisture, Go Fresh மற்றும் Deep Pure போன்ற மூன்று ரகங்களில் சந்தையில் கிடைக்கிறது.
 
பிரபல அழகுக்கலை நிபுணர் நயனா கருணாரத்ன மூலம் அலங்கரிக்கப்பட்ட சிகையலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு பெண்ணினதும் அழகினை வெளிக்கொண்டு வருவதற்காகவே டவ் வர்த்தகநாமம் அர்ப்பணிக்கபட்டுள்ளது என்பதை பங்கேற்ற மாடல்கள் பார்வையாளர்களிற்கு உணர்த்தினர். மிக நீண்டநாளாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 'Real Women, Real Beauty' சிகையலங்கார ஷோவானது டவ் கூந்தல் வகைகளை பிரதிநிதித்துவப்படுத்தி அலுவலக அலங்காரம், Resort அலங்காரம், மாலை நேர அலங்காரம் மற்றும் கொக்டேல் அலங்காரம் போன்ற நான்கு பிரிவுகளில் அணிவகுப்புகள் நடைபெற்றன.
 
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் அமல் கப்ரால் மற்றும் கௌரவ விருந்தினராக யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அசங்க ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந் நிகழ்வில் பிரபல திரை நட்சத்திரங்கள்; மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கொக்டேல் விருந்தினை தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் நடனங்கள் மற்றும் ஃபேஷன் ஷோவினை வந்திருந்த அனைவரும் கண்டு களித்தனர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த தனிநபர் மேலாண்மை விருத்தி நிபுணரும், சிகையலங்கார நிபுணருமான நயனா கருணாரத்ன, 'பெண்கள் அனைவருமே நூறுவீதம் பூரணமானவர்கள் அல்லர். இருப்பினும், அனைத்து பெண்களும் தங்கள் அழகு குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என நாம் நம்புகிறோம். டவ் வர்த்தகநாமத்தின் உந்துசக்தியாக உண்மையான பெண்கள் இருக்கின்றனர். டவ் வர்த்தகநாமத்தின் அனைத்து தயாரிப்புக்களும் கூந்தலிற்கு மிக ஏற்றது என்பதை தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும். இது சற்று சவால் நிறைந்ததாக இருப்பினும், பல விதமான வடிவங்களில் சிகையலங்காரங்களை வடிவமைத்திருந்தோம்' என தெரிவித்தார்.
 
பெண்களின் உண்மையான அழகு ஆரோக்கியமான கூந்தலில் தங்கியுள்ளது என்பது டவ் வர்த்தகநாமத்தின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு பெண்ணினதும் உண்மையான அழகினை வெளிக்கொண்டு வந்து தமக்கேயுரிய தோற்றத்தில் அவர்கள் அழகுடையவர்கள் என்பதை தெளிப்படுத்துவதற்காகவே டவ் வர்த்தகநாமம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. டவ் தயாரிப்புகள் பெண்களிற்கு அழகிய கூந்தலை வழங்குவதுடன், அவர்களின் தோற்றம் மற்றும் அழகு குறித்து அக்கறை செலுத்த வைப்பதே இந் நிகழ்ச்சியை முன்னெடுப்பதற்கான பிரதான காரணமாகும்' என யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அசங்க ரணசிங்க தெரிவித்தார்.
 
இந் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நவநாகரிகமான ஸ்டைல் மற்றும் கண்கவர் டிசைன்கள் அனைத்துமே வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் அலுவலக அலங்காரமானது (office wear) வெள்ளை கலந்த இளம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. கஷுவல் அலங்காரமானது (casual wear) எளிமையான ஆடையலங்காரத்துடனான தளர்வான கூந்தல் அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. அனைத்து டிசைன்களும் வெள்ளை நிறத்தின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் காணப்பட்டன. ஆடைகள் மற்றும் சிகையலங்காரங்கள் போன்றவற்றின் எளிமை மற்றும் நேர்த்தி காரணமாக உடல் அமைப்பு, சரும நிறம் போன்றவற்றின் ஊடாக ஒவ்வொரு பெண்ணினதும் 'Real Beauty' வெளிக்கொண்டு வரப்பட்டது.
 
இக் கண்கவர் நிகழ்ச்சியில் தமது உற்பத்தி வரிசையில் புதிய தயாரிப்பினை அறிமுகப்படுத்தும் நோக்கில் டவ் குழுவினர் மூலம் உத்தியோகபூர்வமாக Dove nourishing oil care' தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஷம்போ தயாரிப்பிலுள்ள vita oils மற்றும் nutritive serum போன்றவை வறட்சியான கூந்தலை சீராக்கி இலகுவான முறையில் விதவிதமான சிகையலங்காரங்களை மேற்கொள்ளக் கூடிய வகையிலான மென்மையான கூந்தலை வழங்குகிறது. அனைவர் மனதிலும் மறக்கமுடியாத மாலைப் பொழுதாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .