2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

குறைந்த வட்டி வீதங்களால் பங்குச்சந்தை தொடர்ந்தும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கும்

A.P.Mathan   / 2013 ஜூன் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள் 

(ச.சேகர்)
 
அதிகளவாக பங்கு கைமாறல்களின் காரணமாக பங்கு கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக அமைந்திருந்ததுடன், கடந்த வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் பொழுது கடந்த வாரத்தில் பதிவான உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. குறைந்த வட்டிவீதங்கள் காரணமாக தொடர்ச்சியாக பங்குச்சந்தை கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கும் என நிதியியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். முதலீட்டாளர்களின் அதிகளவு கவனம் வங்கிகளின் மீதான பங்குகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனங்களின் மீது அதிகளவு இருந்ததை அவதானிக்க முடிந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,488.85 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3666.04 ஆகவும் அமைந்திருந்தன. 
 
மே 27ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 5,441,981,404 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 46,475 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 44,522 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,953 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் செரண்டிப், குட் ஹோப், மொரிசன், ஹியுஜே மற்றும் சிஃஎப்டி போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
ஜிஎஸ் ஃபினான்ஸ், நேஷன் லங்கா (வாக்குரிமை), மிரமர், சிஐஎஃப்எல் மற்றும் என்வி றிசோர்சஸ் (வாக்குரிமை) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.04 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 195.37 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .