2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாத்துறையில் பிரவேசிக்கிறது தம்ரோ

A.P.Mathan   / 2013 ஜூன் 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
தளபாடங்கள் மற்றும் அலுவலக தளபாடங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தம்ரோ நிறுவனம், தனது மற்றுமொரு விஸ்தரிப்பு நடவடிக்கையாக சுற்றுலாத்துறையில் காலடி பதித்துள்ளது. 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 270 அறைகளை கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று நாட்டியுள்ளது.
 
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை நிறைவடைந்த பின்னர், நாட்டில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைந்து வருவதுடன், இந்த துறையில் நிலவும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த துறையில் தனது முதலீடுகளை மேற்கொள்வதற்கு தம்ரோ தீர்மானித்துள்ளது. 
 
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த ஹோட்டலுக்கு மரினோ சான்ட்ஸ் ஹோட்டல் என பெயரிடப்பட்டுள்ளது. 12 மாடி கட்டிடத்தில் அமையவுள்ள இந்த ஹோட்டல், 400,000 சதுர அடியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. காலி வீதி மற்றும் மரைன் டிரைவ் ஆகிய இரு வீதிகளின் ஊடாகவும் இந்த ஹோட்டலுக்கு உள்நுழைவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. 
 
இந்த ஹோட்டல் 2016ஆம் ஆண்டு முதல் இயங்க ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .