Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியு அந்தனீஸ் பாம்ஸ் (பிரைவட்) லிமிடெட், Anthoney’s Meatlery எனும் தனது விற்பனையகத் தொடரை அறிமுகம் செய்துள்ளது. தனது ஒட்டுமொத்த விரிவாக்க தந்திரோபாயத்துக்கமைய, முதலாவது விற்பனையகத்தை, பத்தரமுல்ல, கொஸ்வத்த பகுதியில் திறந்துள்ளது.
அதிகளவு இடவசதிகளைக் கொண்ட நவீன இறைச்சி சுப்பர் மார்க்கெட் தொடரை அடிப்படையாகக் கொண்டதாக Anthoney’s Meatlery அமைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்தினுள், இந்த விற்பனையகத்திலிருந்து சிறந்த இறைச்சித் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களால் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். இதனூடாக பசுமை, பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றை வழங்கும் வர்த்தக நாமத்தின் உறுதிமொழி பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
நியு அந்தனீஸ் பாம்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “எமது சகல தயாரிப்புகளையும் கொண்ட, எமது முதலாவது விற்பனையகத்தை நிறுவுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். உள்நாட்டு சந்தையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், விரைவில் நாட்டின் ஏனைய பாகங்களிலும் விற்பனையகங்களை திறப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
Haritha Hari, Crizzpys, Chico, Precut, Pet food போன்றவற்றுடன் அண்மையில் சேர்க்கப்பட்ட 6-துண்டுகள் கொண்ட HIT பொதி போன்றவற்றுடன், சொசேஜ் வகைகள், பிரெட்டட் தெரிவுகள், குளிர்ச்சியான துண்டுகள், முட்டைகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் சிக்னேச்சர் சோஸ் வகைகள் போன்ற நியு அந்தனீஸ் பாம்ஸ் வழங்கும் சகல தெரிவுகளையும் இந்த விற்பனையகம் கொண்டிருக்கும்.
நாட்டில் கோழித் தீன்களுக்கான தட்டுப்பாடு நிலவிய போதிலும், தனது இறைச்சித் தெரிவுகளை போதியளவில், தட்டுப்பாடின்றி விநியோகிப்பதை நியு அந்தனீஸ் பாம்ஸ் அண்மையில் உறுதி செய்திருந்தது. அத்துடன், உள்நாட்டிலும், சர்வதேச சந்தைகளிலும் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில், தனது உற்பத்தியையும் விரிவாக்கம் செய்திருந்தது. வெளிநாட்டு சந்தைகளுக்கான உற்பத்தி விரிவாக்கத்தினூடாக, அந்நியச் செலாவணியையும் நாட்டினுள் கொண்டு வருவதற்கு நிறுவனத்துக்கு முடிந்துள்ளது.
போஷாக்கு நிறைந்த, அன்ரிபயோட்டிக் அற்ற மற்றும் சுவை நிறைந்த பசுமையான மற்றும் பாதுகாப்பான இறைச்சி வகைகளை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் செயன்முறைகளின் மற்றுமொரு படியாக, சொந்த விற்பனையகத்தை நிறுவும் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் தொரகடபளிய எனும், ஒன்லைன் இறைச்சி விற்பனைப் பகுதியையும் அறிமுகம் செய்திருந்ததுடன், நாடளாவிய ரீதியில் இலவச விநியோக சேவைகளையும் வழங்குகின்றது.
Anthoney’s Meatlery இல் கோழி இறைச்சித் தெரிவுகளுக்கு மேலதிகமாக, பன்றி, ஆடு மற்றும் மாட்டிறைச்சித் தெரிவுகளும், விரைவில் மறிஆட்டு இறைச்சித் தெரிவுகளையும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
37 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago