Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘KOKATH’ எனும் வர்த்தக நாமத்தின் கீழ், வாழ்க்கை முறை விற்பனை மய்யச் சங்கிலியொன்றை LAUGFS Solutions அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்றுறையில் தர ஒப்பீட்டு நியமத்தை ஏற்படுத்தியவாறு, KOKATH வாழ்க்கைமுறை விற்பனை மய்யமானது, மூன்று வெவ்வேறு கட்டுபடியாகும் விலைமட்டங்களில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற 700க்கும் மேற்பட்ட நவீன உயர்தர உற்பத்திகளைக் கொண்டுள்ளது.
நவீன, ஜப்பானிய சில்லறை வர்த்தக எண்ணக்கருக்களை உபயோகித்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள முதலாவது KOKATH விற்பனை மய்யம், ஜா-எல K-Zone பல்பொருள் விற்பனை மய்யத்தில், அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. பரந்துபட்ட உயர் தரத்திலான, செலவு செய்யும் பணத்துக்கு உண்மையான பெறுமானத்தைத் தருகின்ற வாழ்க்கைமுறை உற்பத்திகளை, ஒரே கூரையின் கீழ் வழங்கி, வாழ்க்கைமுறை தேவைகள் அனைத்தையும் இது பூர்த்தி செய்கின்றது.
“உள்நாட்டிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு, தனித்துவமான பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்கும் வகையில், KOKATH என்ற எமக்குச் சொந்தமான வர்த்தக நாமத்துடன், வாழ்க்கைமுறை சில்லறை வர்த்தகத்துறையில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். உள்நாட்டுத் தெரிவு முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கைமுறை அபிலாஷைகளை ஈடுசெய்யும் வகையில், மிகக் கவனமாக ஆராயப்பட்டுத் தருவிக்கப்பட்டுள்ள அதியுயர் தர சர்வதேசப் பொருள் உற்பத்திகளை வழங்கும் வகையில், ஜப்பானிலுள்ள மிகப் பாரிய வாழ்க்கைமுறை உற்பத்தித் தயாரிப்பு நிறுவனமொன்றுடன், நாம் கைகோர்த்துள்ளோம்” என்று, லாஃப்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான டபிள்யூ.கே. எச்.வெகாஹாபிட்டிய கருத்து வெளியிட்டுள்ளார்.
“புத்தாக்கமான வாழ்க்கைமுறைத் தீர்வுகளுடன், இந்தச் சில்லறை வர்த்தகத்துறையில் பாரிய வளர்ச்சி வாய்ப்புகள் காணப்படுவதை நாம் இனங்கண்டுள்ளதுடன், எதிர்காலத்தில், இந்த எண்ணக்கருவினூடாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பல வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள KOKATH விற்பனை மய்யமானது, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் உரிய, 700க்கும் மேற்பட்ட உற்பத்திகளை வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
18 minute ago
31 minute ago