Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
Future Minds உயர் கல்வி கண்காட்சிக்கு SLT-MOBITEL அனுசரணை வழங்கியிருந்தது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் இடம்பெற்ற இந்த கண்காட்சியில், SLT-MOBITEL இனால் இலவச SLT Wi-Fi வசதி வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜுன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கண்டி சிட்டி சென்ரர் மற்றும் காலியில் ஜுலை 1 மற்றும் 2ஆம் திகதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் இந்த இலவச SLT Wi-Fi வசதியை வழங்க முன்வந்துள்ளது.
நிகழ்வில் SLT-MOBITEL பிரசன்னத்தைக் கொண்டிருந்தமையினூடாக விருந்தினர்களுக்கு கண்காட்சிகளின் போது இணைப்பில் இருக்கவும், தடங்கலில்லாத இணைய பாவனையை மேற்கொள்ளவும் முடிந்தது. மேலும், SLT-MOBITEL இன் பயிற்சி பிரிவும், Future Minds இல் பங்கேற்று, சகல அறிவை மேம்படுத்த எதிர்பார்ப்போருக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் வழங்கியிருந்தது.
Future Minds என்பது மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை அணுகுவதில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அதிகளவு தங்கியிருக்கக்கூடிய மற்றும் இனங்காணப்படக்கூடிய கட்டமைப்பாக அமைந்துள்ளது. சர்வதேச உயர் கல்வியை ஒன்றிணைக்கும் வகையில் Future Minds 2023 நிகழ்வு அமைந்திருப்பதுடன், “No One Left Behind” எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. தொழில்நிலை ஆலோசனை வழங்கலில் முன்னோடியாக அமைந்திருப்பதுடன், நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கண்காட்சியுடனும் ஒப்பிடுகையில், அதிகளவான பார்வையாளர்களை கவரும் Future Minds கல்விசார் கண்காட்சி துறையில் 16 வருட கால சிறப்பைக் கொண்டுள்ளது.
3 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago