2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

Bolt A54 ஸ்மார்ட்ஃபோன் இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஜூன் 06 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் முன்னணி கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனமான மைக்ரோமெக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய 3G வசதி கொண்ட Bolt A54 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத் தயாரிப்பானது the Qualcomm Snapdragon™ S1 MSM™7227A processorஐ பயன்படுத்தும் Qualcomm டெக்னாலொஜியின் Qualcomm® Reference Design இற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.
 
A54 ஆனது முழு தொடுகை திரையை கொண்டுள்ளது. மேலும் A54 ஆனது அன்ட்ரொயிட் 2.3.5 தொழில்நுட்பத்தின் ஜின்ஜர் பிரட் சிஸ்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,  மிக வேகமான செயற்பாட்டு வலுவை வழங்கும் வகையில் 1GHz Qualcomm Snapdragon S1 processor களை கொண்டுள்ளது. மேலும் இதில் 3.0 MP கமரா உள்ளதுடன், இக் கைத்தொலைபேசி மூலம் உங்களுக்கு பிடித்தமான தருணங்களை உச்ச தெளிவுடன் படம் பிடித்து வைத்துக் கொள்ள முடியும். A54  இன் மெமரியை 32 GB வரை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும்.  
 
மேலும் இதில் 1300 mAh பேட்டரி காணப்படுவதுடன், Bluetooth 2.1 மற்றும் Wi-Fi என எந்தவொரு சமூக இணையப் பக்கத்தினதும் முழு நேர இணைப்பினையும் மற்றும் 4 மணித்தியால Talk time இனையும் உறுதிப்படுத்தும் வகையிலான வலுவான battery backup இனை கொண்டுள்ளது.
 
அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவித்த மைக்ரொமெக்ஸ் நிறுவனத்தின் VP இன்டர்நெஷனல் பிஸ்னஸின் அமித் மதூர், 'மொத்தமாக SAARC நாடுகளிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததுடன், மிக முக்கியமான வர்த்தக பிரதேசமாக தம்மை உறுதிப்படுத்திய இலங்கையானது எமது வலிமை மிகுந்த சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந் நாட்டு  பாவனையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பு காணப்படுவதுடன், மைக்ரொமெக்ஸ் தயாரிப்புகளிற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிந்தது. உள்நாட்டில் உள்ள எமது வாடிக்கையாளர்களிற்கு தொடர்ந்தும் எமது புதிய தயாரிப்புகளை வழங்கவுள்ளோம்' என்றார்.
 
மைக்ரொமெக்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சன்ஜீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், 'உறுதியான வர்த்தகநாமமாக மைக்ரொமெக்ஸ் விளங்குகிறது. இலங்கையில் மைக்ரொமெக்ஸ் வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மைக்ரொமெக்ஸ் தயாரிப்புகள் ஊடாக மாத்திரமன்றி சிறந்த சேவைகள் மற்றும் பெறுமதியான வரப்பிரசாதங்கள் மூலமாகவும் மேலும் அதிகரிப்பதே எமது நோக்கமாகும்'. மைக்ரொமெக்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனமானது அண்மையில் மைக்ரொமெக்ஸின் சிறந்த சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்களிற்கு வழங்கும் நோக்கில் மெஜெஸ்டிக் சிட்டியில் புதிய காட்சியறை மற்றும் சேவை நிலையத்தை திறந்து வைத்தது. இலங்கையில் மைக்ரொமெக்ஸ் நிறுவனத்தின் தேசிய விநியோகத்தராக மெட்ரோபொலிடன் டெலிகொம் விளங்குகிறது.
 
மைக்ரொமெக்ஸ் A54 ஆனது மெஜெஸ்டிக் சிட்டி மற்றும் நாடுபூராகவும் உள்ள அபான்ஸ் விற்பனை காட்சியறைகளில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு http://www.micromaxmobile.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசியுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .