.jpg)
வாகன பராமரிப்பு துறைக்கு அவசியமான பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான 3M அமெரிக்கா கோர்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான 3M லங்கா பிரைவேற் லிமிடெட் மூலம் இலங்கையின் கார் பந்தய ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'Fox Hill Supercross' நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்த போட்டி தியத்தலாவ, இலங்கை இராணுவ பயிற்சியகம் மற்றும் இலங்கை வாகன பந்தய சாரதிகள் சம்மேளனம் ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்ததன் மூலம், 3M லங்கா பிரைவேற் லிமிடெட்டை சேர்ந்த குழுவினர், நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு கார் பராமரிப்பு நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இவற்றில் நிறுவனத்தின் தயாரிப்புக்களின் செயற்திறன், வாகனங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமான சேவைகள் போன்றன உள்ளடங்கியிருந்தன. அத்துடன், வாகனத்தின் உள்ளக மற்றும் வெளிப்புற பகுதிகளை பராமரிக்கும் வகையில் அமைந்த 3M வாகன கண்ணாடி (சூரிய வெளிச்ச கட்டுப்படுத்தும்) பாதுகாப்பு படம், 3M பெயின்ட் பாதுகாப்பு படம் மற்றும் 3M நோமெட் வினைல் கொயில் மெட்டிங் போன்றன குறித்து விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.
வாகன அலங்காரம் மற்றும் வெளிப்புற கிராஃபிக்ஸ் குறித்த கேள்வி அதிகளவில் காணப்படுகின்றமையால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில், 3M தனது வாகன மேற்புற பட சுற்று தீர்வுகள் குறித்த செயன்முறை விளக்கங்களையும் வழங்கியிருந்தது.
3M வாகன பராமரிப்பு தகவல் கூடமானது கார் பிரியர்களுக்கு 3M இன் Do-it-yourself (DIY) எனும் கார் பராமரிப்பு நுணுக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது. இந்த தயாரிப்புக்கள் உங்கள் வாகனத்திற்கு புத்தம் புதிய தோற்றத்தை வழங்குவதுடன், குறைந்த செலவில் வீட்டிலிருந்தவாறே இந்த பராமரிப்புகளை செய்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றன.
இந்த நிகழ்வு குறித்து 3M லங்கா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து பிரிவின் முகாமையாளர் ரசித் செனரத் கருத்து தெரிவிக்கையில், 'Fox Hill Supercross என்பது இலங்கையில் நடைபெறும் மோட்டார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக நாமமாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரம் வாய்ந்த மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அமைந்த கார் பராமரிப்பு தயாரிப்புகளை விநியோகிக்கும் முன்னணி நிறுவனம் எனும் வகையில் தியத்தலாவ, இலங்கை இராணுவ பயிற்சியகம் மற்றும் இலங்கை வாகன பந்தய சாரதிகள் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து தமது அனுசரணையை வழங்குவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகிறோம்' என்றார்.
ஏற்பாட்டாளர்களின் சார்பாக தியத்தலாவ, இலங்கை இராணுவ பயிற்சியகத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஐ.பி.ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், 'வருடாந்தம் கார் பந்தய பிரியர்களின் மூலம் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக Fox Hill Supercross போட்டி அமைந்துள்ளது. நாட்டின் மிகவும் வியப்பூட்டும் விளையாட்டு நிகழ்வாக இந்த போட்டி வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த வருடம் இந்நிகழ்வுக்கு 3M லங்கா நிறுவனம் ஓர் அனுசரணையாளராக செயற்பட முன்வந்தமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் பங்களிப்பு பல வழிமுறைகளில் எமக்கு இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய உதவியிருந்தது' என்றார்.
3M லங்கா நிறுவனத்தின் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து பிரிவின் முகாமையாளர் ரசித் செனரத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'வாகன பராமரிப்பு மற்றும் விபத்தொன்றின் பின்னர் வாகனத்தை சிறந்த முறையில் பழுதுபார்த்து முன்பிருந்த தோற்றத்தை வழங்கிடும் வகையில் நாம் அறிமுகம் செய்திருந்த 3M கார் பராமரிப்பு தீர்வுகள் பல வாகன பராமரிப்பு நிபுணர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன. அத்துடன் உலகளாவிய ரீதியில் வாகன பிரியர்களின் மூலம் அதிகளவில் விரும்பி நாடப்படும் இந்த தயாரிப்புகளை இலங்கையை சேர்ந்த வாகன பிரியர்களுக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்' என்றார்.