2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

UTE - CAT இயந்திரத்திற்கான 'Product Link' இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச புகழ்பெற்ற கட்டபிலர் (CAT) வர்த்தக நாமத்தை இலங்கையில் பிரதிநிதப்படுத்தும் யுனைட்டட் டிராக்டஸ் அன்ட் எகியூப்மன்ட் நிறுவனமானது 'Product Link' இனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள CAT மூலம் வடிவமைக்கப்பட்ட 'Product Link' ஊடாக வாடிக்கையாளர்கள் தங்கள் இயந்திரத்தின் நிலைமை, பாவனை மற்றும் செயற்படும் இடம்போன்ற விபரங்களை வேறு இடத்திலிருந்தவாறே இணையத்தினூடாக கண்காணிக்க முடியும்.

'Product Link' ஊடாக வாடிக்கையாளர்கள் தங்கள் இயந்திரப் பாகங்களின் நிலைமைகள், செயற்படும் இடம், எரிபொருள் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து இணையத்தினூடாக அவதானிக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர் தங்கள் இயந்திரத்தில் ஏதாவது பிரச்சினைகள் எழும்போது தலையீடு செய்து சரிபார்த்துக்கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, இயந்திரத்தின் நீர் பம்பியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது இயந்திரத்தின் எஞ்சின் பாதிப்படைய முன்னர் தலையிட்டு தவிர்த்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
'Product Link' குறித்து UTE யின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாட் இஸ்மையில் கருத்து  தெரிவிக்கையில், 'எமது துறையில் CAT சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழ்கிறது. எனவே அனைத்துவிதமான புதிய கண்டுபிடிப்புகளும் அங்கிருந்தே உருவாகின்றது. CAT உற்பத்தி மற்றும் சேவைகளை இலங்கையில் விநியோகிக்கும் UTE யானது உள்நாட்டில் சேவைகளை வழங்குவதையிட்டு பெருமையடைகிறது. 'Product Link' ஆனது எமது அடுத்த மிகப்பெரிய இலக்காக உள்ளது. இது திட்ட முகாமைத்துவத்தையும், கணினிமுறை தீர்வுகளையும் வழங்குகிறது' என்றார்.

'Product Link'இன் மூலம் பெறப்படும் Time–line மற்றும் வரைபடம் மூலம் உங்கள் இயந்திரத்தின் நிலைமை, எரிபொருள் செலவு குறித்து அவதானிக்க முடியும். மேலும் தற்போதைய ரகங்கள் குறித்தும், அதன் வளப்பயன்பாடு குறித்தும் முடிவெடுக்கக் கூடிய நிலைமைகள் காணப்படுகிறது. மேலும் இதனூடாக வாடிக்கையாளர்கள் தளத்திற்கு சமூகமளிக்காது இணையத்தினூடாக சிறிய சரிப்படுத்தல்களை செய்துகொள்ள முடியும்.

'It pays to know' என்பது 'Product Link' இன் குறிக்கோளாகும். எனவே அதன் மூலம் வாடிக்கையாளர் தமது வேலைத்தளத்தில் இருந்தவாறே இயந்திரத்தின் நிலைமை, இடம் மற்றும் அனைத்து இயந்திரத் தொகுதிகளின் நிலைமைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினி ஊடாக உங்கள் இயக்குநர், தள கண்காணிப்பாளர் மற்றும் பராமரிப்பு முகாமையாளர்கள் ஆகியோர் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனவே உங்கள் நேரம் மற்றும் பணம் சேமிக்கப்படுகிறது' என இஸ்மையில் தெரிவித்தார்.

'Product Link' ஊடாக வாடிக்கையாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த இயந்திரத் தொகுதியையும் ஒரே நேரத்தில் கண்டுகொள்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் செலவு மற்றும் பராமரிப்பு மாதிரிகளை அறிந்து கொள்வதுடன், தேவையான நேரங்களுக்கு முன்னதாகவே தமது பராமரிப்பு குழுவினர் மற்றும் எரிபொருள் தாங்கி லொறிகளை வேலை நடைபெறும் தளத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தங்கள் செயற்பாட்டுக்கு உயர் வினைத்திறனை பெற்றுக் கொள்வது குறித்த விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளலாம். மிகக் குறைவான செயல்திறன் கொண்ட இயந்திரங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிவதுடன், இயந்திர தொகுதியின்; அதிகூடிய செயல்திறனுக்கான மீள் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

'Product Link' இயந்திரம் மூன்றுபாக வன்பொருள்களில் செயற்படுகிறது. முதற்பாக வன்பொருளானது இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக இயந்திர நிலைமை மற்றும் தரவுகளை அறிந்து கடத்தப்படுகிறது. இரண்டாவதாக, அமெரிக்காவைத் தளமாக கொண்டியங்கும் Telco AT&T மற்றும் GPS உள்நாட்டு பங்காளர்களான மொபைல் கைத்தொலைபேசி வலையமைப்பின் ஊடாக தரவுகளை பெறும் வசதிகள் காணப்படுகிறது. இறுதியாக அனைத்து தரவுகளின் விபரங்களும் ஊயுவு வெப் சேர்வர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வாடிக்கையாளரும் இவ் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அதன் பயனை பெற்றுக்கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .