Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S.Sekar / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலுமுள்ள 24 மாவட்டங்களுக்கும் தமது தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக அதன் நாடு தழுவிய 4G ஐ அறிமுகப்படுத்தியதன் பின்னர், எயார்டெல் லங்கா தனது அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து வலையமைப்புகளுக்கும் வரையறையற்ற அழைப்புகளை அறிமுகப்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், முற்கொடுப்பனவு பாவனையாளர்களுக்கு Freedom Unlimited Packகள் மூலம் எந்தவொரு வலையமைப்பிற்கும் வரையறையற்ற அழைப்புகளை எயார்டெல் அறிமுகப்படுத்தியது
வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்கும் பணியின் ஒரு பகுதியாக, Airtel இன் Unlimited Freedom பிற்கொடுப்பனவு பெக்கேஜ்களில் சமீபத்தில் Unlimited 1098 பெக்கேஜ் அறிமுப்படுத்தப்பட்டது. ரூ.1,098 பெறுமதியில், புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த Unlimited பெக்கேஜ் மூலம், பிற்கொடுப்பனவு பாவனையாளர்கள் எந்த வலைப்பின்னலுக்கும் வரையறையற்ற அழைப்புக்களை அனுபவிக்க முடியும். மேலும் 40GB 4G டேட்டாவுடன் முழு HD தரமான வீடியோ மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் SMS வசதிகளுடன் எந்த வலைப்பின்னலுக்கும் மாதத்திற்கு போதுமானதாக இருக்கும்.
மேலும், எயார்டெல் மட்டுமே பிற்கொடுப்பனவு பயனர்களுக்கு ‘Data Rollover’ வசதியைத் தொடர்ந்து வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதுடன், ஒரு பாவனையாளரின் Data செலவுகளைச் சேமிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாவனையாளர்கள் 200GB வரையிலான டேட்டாவை சேமிக்க முடியும். இது தடையற்ற HD தரமான சமூக ஊடகங்கள், வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் Download செய்ய உதவுகிறது.
தனிநபர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஏற்றதாக, எயார்டெல்லின் வரையறையற்ற திட்டங்கள் அதன் பயனர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக உயர்ந்த தரமான அழைப்பு வசதிகள் மற்றும் மொபைல் Data சேவைகளை வழங்குவதுடன், எயார்டெல்லின் 1098 பேக்கேஜ் மாதாந்த தொலைத்தொடர்புச் செலவினங்களில் குறைந்த பட்சம் 50%ஐ குறைக்கிறது.
“ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கான அணுகலை உறுதிசெய்து, எங்கள் பாவனையாளர்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த Mobile Broadband அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் புத்தாக்கங்களை உருவாக்குவதே எயார்டெல்லின் நோக்கம். எங்கள் முற்கொடுப்பனவு பயனர்கள் வரையறையற்ற சலுகைகளுக்காக, குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது, எங்கள் முற்கொடுப்பனவு பயனர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர், மேலும் எங்கள் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago