2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செலான் Accelerate கணக்குதாரர்களுக்கு விலைக்கழிவுகள்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, இலங்கையின் சில உயர் கல்வி நிலையங்களுடன் கைகோர்த்து, செலான் Accelerate கணக்குதாரர்களுக்கு விலைக்கழிவுகளை வழங்க முன்வந்துள்ளது.

செலான் Accelerate கணக்குதாரர்களுக்கு அவர்களின் பிரத்தியேக வளர்ச்சி மற்றும் கல்விசார் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவுவது மற்றும் வலுவூட்டும் நோக்குடன், பல்வேறு கல்வி நிலையங்களை இந்தத் திட்டத்தில் செலான் வங்கி உள்வாங்கியுள்ளதுடன், இதனூடாக பரந்தளவு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அதன் பிரகாரம், ANC கல்வியகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு MSc, LLB மற்றும் LLM கற்கைகளை தொடர்வதற்கு ரூ. 100,000 விலைக்கழிவும், BMS இல் தெரிவு செய்யப்பட்ட கற்கைகளுக்கு 15% வரை விலைக்கழிவையும் பெற்றுக் கொள்ள முடியும். SLIM இல் பதிவுகளின் மீது 10% விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ICBT இல் உள்நாட்டுக் கற்கைகளுக்கு 5% விலைக்கழிவையும், AIC இல் கட்டணத்தில் 20% ஐயும் பெறலாம். CMA இனால் தெரிவு செய்யப்பட்ட கற்கைகளுக்கு ரூ. 15,000 விலைக்கழிவு வழங்கப்படுவதுடன், AOD இல் இணைவுக் கட்டணத்தில் 15% விலைக்கழிவு செலான் Accelerate கணக்குதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. 18 மற்றும் 25 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்தக் கல்வியகங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து, தமது செலான் Accelerate டெபிட் அட்டையப் பயன்படுத்தி அவ்வாறான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது இந்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

செலான் Accelerate என்பது தனியார் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த நிரந்தர சம்பளம், கொடுப்பனவுகள் அல்லது மேலதிக வருமானத்தைப் பெறும் ஊழியர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்த விசேட கணக்காகும். பல்வேறு பங்காண்மைகளினூடாக செலான் Accelerate கணக்குதாரர்களுக்கு கல்வி, வாழ்க்கைமுறை மற்றும் பொழுது போக்கு போன்ற தமது முழுமையான உள்ளம்சங்களை அனுபவிப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். இளம் சம்பளம் பெறுவோரின் நிதித் தேவைகளை இனங்கண்டு, அவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில், செலான் வங்கியினால் கல்வி அடிப்படையிலான சலுகைகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் செலான் வங்கியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது Accelerate வாடிக்கையாளர்கள் தேசத்தின் இளைஞர்களை பிரதிபலிக்கின்றனர். தமது வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக மாற்றியமைப்பது பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகளையும் ஈடுபாடுகளையும் கொண்டுள்ளனர். செலான் Accelerate இனால் அவர்களுக்கு தமது நிதி இருப்புகளை சுயாதீனமாக நிர்வகித்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்படுகின்றது. அவர்களின் வாழ்க்கையில் உயர் கல்வி என்பது மிகவும் முக்கியமான பகுதியாக அமைந்திருப்பதுடன், அவர்களின் கற்கைகளுக்கு உதவுவது என்பது பெரும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள முன்னணி உயர் கல்வி நிலையங்களில் எமது செலான் Accelerate இளைஞர்களுக்கு பரந்தளவு சலுகைகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். அவர்களுக்கு தமது கனவுகளை எதிர்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

செலான் Accelerate இனால் பரந்தளவு சம்பள சேமிப்புக் கணக்குகளின் பெருமளவு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. இதில் இலவச ATM பணமீளப் பெறுகைகள், விசேட சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளுடன் Premier, Prime, Plus மற்றும் Entry அங்கத்துவ பிரிவுகள், திருமணம், குழந்தை பிறப்பு, 21ஆவது பிறந்த தினம் மற்றும் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களுக்கு ரூ. 200,000 வரை பண வெகுமதிகள் போன்றன அடங்கியுள்ளன.   தமது பிரத்தியேக அல்லது நிபுணத்துவ இலக்குகளை அடைய எதிர்பார்க்கும் எவரும், செலான் Accelerate இல் சிறிய மாதாந்த பங்களிப்புடன் தமது பயணத்தை ஆரம்பிக்கலாம். 2 முதல் 10 வருடங்கள் வரையான காலப்பகுதியில் குறிப்பிட்ட மாதாந்த வைப்புகளை மேற்கொண்டு சேமிப்பு இலக்கை அடைய முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .