Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 02 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
JLG 1200 SJP Ultra Series Telescopic Lift தீர்வை தனது வாடிக்கையாளரான South Asia Gateway Terminals (Pvt) Ltd (SAGT) க்கு யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் வழங்கியிருந்தது. நாட்டில் காணப்படும் மிகவும் உயரமான self-propelled telescopic Lift தீர்வாக இது காணப்படுகின்றது.
இந்த JLG ultra series telescopic boom Lift மூலமாக 120 அடி உயரம் வரை செல்ல முடியும் என்பதுடன், கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் SAGT இன் gantry craneகளின் பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படும். இதன் மூலமாக சர்வதேச கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் சமூகத்துக்கு, போட்டிகரத்தன்மை வாய்ந்த சேவையையும், கப்பல்களுக்கு சிறந்த quayside வினைத்திறனை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் JLG, கப்பல் போக்குவரத்து துறைக்கு அதிகளவு விருப்பைப் பெற்ற விநியோகத்தராக திகழ்கிறது. அண்மையில் நிறைவடைந்த Construct 2015 கண்காட்சியின் போது இந்த இயந்திரம் SAGT அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன் போது, பொது மக்களுக்கும் இந்த சக்தி வாய்ந்த இயந்திரத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. JLG Ultra series boomsகள் 100,000 psi உருக்கிரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், போட்டியாளர்களின் உற்பத்திகளை விட 40% வலிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த இயந்திரங்கள் 1000 இறாத்தல் எடையை உயர்த்தக்கூடிய திறனை கொண்டுள்ளன. இதன் மூலமாக துறையில் காணப்படும் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரமாக இது அமைந்துள்ளது.
இந்த ஆண்டு இடம்பெற்ற Construct கண்காட்சியில் பங்குபற்றியோரின் கவனத்தை பெருமளவு ஈர்த்திருந்த அலகாக இந்த இயந்திரம் அமைந்திருந்தது. முழுமையான இயங்கும் நிலையில், இலகுவாக 12 மாடி கட்டடத்தின் உச்சத்தை எய்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 120 அடி உயரத்தில் செயற்படுத்துநருக்கு சௌகர்யத்தை வழங்கும் வகையில் தன்னியக்க platform leveling அம்சம் அமைந்துள்ளது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago