Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஜெட்விங் ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் குறித்த ஹோட்டல் யாழ் நகர மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜெட்விங் ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தமான இந்த ஹோட்டல் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 55 அறைகள் உள்ளன. ஜெட்விங் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் (JYDP) ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 67 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது.
இவர்களுக்கான சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜயகலா மகேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜெட்விங் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் ஹிரான் குரேயும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
8 minute ago
18 minute ago
25 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
25 minute ago
30 minute ago