Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்திருந்த புத்தாக்கமான அம்சங்கள், புதிய தலைமுறை உள்ளம்சங்களைக் கொண்ட காப்புறுதி app ஆன Clicklife இனால், நாடு முழுவதிலும் வாழ்க்கைமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட வண்ணமுள்ளதுடன், காப்புறுதி அனுபவமும் மேம்படுத்தப்பட்ட வண்ணமுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள Clicklife App, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பரந்தளவு டிஜிட்டல் நோக்கத்தின் அங்கமாக அமைந்திருப்பதுடன், பாரம்பரிய ஆயுள் காப்புறுதியை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.
‘Clicklife ecosystem’ இனால், பரிபூரண வாழ்க்கைமுறை கட்டமைப்பு வழங்கப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு தமது ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையை சிறப்பாக பேணுவதற்கு ஆதரவு வழங்கப்படுகின்றது. Clicklife App ஊடாக, பாவனையாளர்களுக்கு நவீன உள்ளம்சங்களான Thyaga எனும் இலங்கையின் பல்நோக்கு அன்பளிப்பு வவுச்சர் கட்டமைப்பை அணுகும் வசதி வழங்கப்படுகின்றது.
முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பினூடாக ஒப்பற்ற அனுபவம் வழங்கப்படுகின்றது. Clicklife App இன் உள்ளம்சங்களுடன் ஈடுபாட்டை பேணுகின்றமைக்காக வழங்கப்படும் லோயல்டி புள்ளிகளை சேகரித்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் வவுச்சர்களினூடாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த டிஜிட்டல் வவுச்சர்களை 85 க்கும் அதிகமான விற்பனைப் பங்காளர் பகுதிகளில் பயன்படுத்த முடியும். இவற்றில் சுப்பர்மார்கெட்கள், பாமசிகள், உணவகங்கள் மற்றும் ஆடை விற்பனையகங்கள் போன்றன அடங்கியுள்ளன. பங்காளர் வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் விசேட விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வார்கள். App ஊடாக ப்ரீமியம் கொடுப்பனவுகளை மேற்கொள்வது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வாராந்தம் 150 நிமிடங்கள் உடற் செயற்திறனுடன் இருப்பது எனும் உடற் தகைமை இலக்கை பூர்த்தி செய்வது மற்றும் மாதாந்த சவால்களில் பங்கேற்பது போன்றவற்றினூடாக புள்ளிகளை சேகரித்துக் கொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்களினால் மைல்கற்கள் எய்தப்படும் போது விசேட அன்பளிப்புகளும் வழங்கப்படுகின்றன.
ஜோன் கீல்ஸ் X (JKX) திறந்த புத்தாக்க நிகழ்ச்சித்திட்டத்தினூடாக Thyaga உடனான பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், இதனை யூனியன் அஷ்யூரன்ஸின் தாய் நிறுவனமான, ஜோன் கீல்ஸ் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. திறந்த புத்தாக்கத்துககு ஆதரவளிப்பதற்கும், நிதித்தொழில்நுட்ப கட்டமைப்பை இலங்கையில் கட்டியெழுப்பவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. JKX திறந்த புத்தாக்க நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் கட்டமைப்பின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதில் யூனியன் அஷ்யூரன்சும் அடங்கியுள்ளது. திறந்த புத்தாக்கத்தை கட்டியெழுப்பும் சர்வதேச கட்டமைப்பை கட்டியெழுப்புவது இதன் இலக்காகும்.
Clicklife App இனால் காப்புறுதிக் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது மொபைல் தொலைபேசிகளினூடாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் காப்புறுதியை பெற்றுக் கொள்ள முடியும். எவ்விதமான சிக்கல்களுமின்றி, கடதாசி பாவனையுமின்றி, சுய பராமரிப்பு App இனை பயன்படுத்தி, நபர் ஒருவர் தமது காப்புறுதி தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தவணைக் கட்டணங்கள் செலுத்த முடியும், காப்புறுதியுடன் தொடர்புடைய ஆவணங்களை தரவிறக்கம் செய்யலாம், மற்றும் காப்புறுதித் தகவல்களை ஒரு க்ளிக்கில் பார்வையிட முடியும். நபர் ஒருவர் தமது வீட்டில் சௌகரியமாக இருந்தவாறு காப்புறுதி ஆவணங்கள் மற்றும் உரிமைகோரல் படிவங்களை சமர்ப்பிக்க முடியும். மருத்துவ சிகிச்சையை பொறுத்தமட்டில், App இனால் பணமில்லாத வைத்தியசாலை அனுமதி முதல் வைத்திய நிபுணர்களை செனல் செய்வது வரை இலகுவாக மற்றும் சௌகரியமாக மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.
25 minute ago
30 minute ago
34 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
34 minute ago
48 minute ago