Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவை வழங்குநரான DHL Express நிறுவனமானது, தமது நிறுவனத்தின் நடுநிலையான கரியமில கப்பல் ஏற்றுமதி (carbon neutral shipment) தெரிவான DHL GOGREEN இனை பயன்படுத்திய இலங்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு கார்பன் கிரெடிட் சான்றிதழை வழங்கியுள்ளது. இரண்டாவது தடவையாக இந்த சான்றிதழை பெற்றுள்ளதன் மூலம் இந்த வங்கியின் DHL சூழல் நட்புறவான கப்பல் ஏற்றுமதி தெரிவின் தொடர்ச்சியான பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
DHL GOGREEN பொருட்கள் மற்றும் சேவைகளை ஊடாக கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியானது 7,900kg கரியமில வாயு வெளியேற்றத்தை ஈடுசெய்துள்ளதை இவ்வாண்டு விருது அங்கீகரித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 5000kg கரியமில வாயு வெளியேற்றத்தை ஈடுசெய்து DHL GOGREEN சான்றிதழை பெற்ற இலங்கையின் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி தனதாக்கிக் கொண்டது.
'உலகின் முன்னணி சரக்கியல் நிறுவனம் எனும் ரீதியில், சுற்றுச்சூழல் சவால்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பினை DHL கொண்டுள்ளது. DHL GOGREEN நடுநிலை காலநிலை போன்ற சேவைகள் எமது கரியமில தடத்தினை குறைப்பதற்கான தீர்வுகளை வழங்குகிறது' என இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா தெரிவித்தார். ‘GOGREEN சேவையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் DHL கப்பல் போக்குவரத்தானது ஏனைய கப்பல் போக்குவரத்து சேவைகளை போலவே இடம்பெறும். இருப்பினும் எமது வாடிக்கையாளருக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் கரியமில உமிழ்கள் வெளியேற்றம் நடுநிலையானதாக இருக்கின்றன' என மேலும் அவர் தெரிவித்தார்.
தமது பெருநிறுவன உறவினை உறுதிப்படுத்தவும், வலுவான 'பசுமை' கலாச்சாரம் மற்றும் தொடர்பினை பேணும் நோக்கிலும், சூழல் மீது நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் வகையில் DHL மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி போன்ற நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இலங்கை சட்ட மற்றும் இணக்கத்தின் தலைவர் இனாம் காஸீம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் சுற்றுச்சூழல் தளத்தின் தணிக்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், இருநாட்டு முகாமைத்துவ குழும அனுசரணையாளருமான மாரிமுத்து சிவநந்தன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், 'மீண்டும் ஒருமுறை இந்த விருதை பெற்றுள்ளமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது ஆர்வங்களில் ஒன்றாக கரியமில தடத்தினை குறைத்தல் அமைந்துள்ளதுடன், எமது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது காணப்படுகிறது' என்றனர்.
வங்கியின் 95 சதவீதமான நடுநிலையான கரியமில சர்வதேச கூரியர் சேவைகளை மேற்கொள்ளும் வகையில் உலகளாவிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு DHL GOGREEN நடுநிலையான காலநிலை சேவைகளை உலகளவில் பின்பற்றிய முதல் வங்கியாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி திகழ்கிறது. இந்த கரியமில வெளியேற்றத்தின் கணிப்பு மற்றும் எதிரீடு ஆகியன உலகின் முன்னணி ஆய்வு, ஒப்பாய்வு, பரிசோதனை மற்றும் சான்றளிப்பு நிறுவனமான Societe Generale de Surveillance (SGS) மூலம் வருடாந்தம் சான்றளிக்கப்படுகிறது.
CO2 செயற்திறன் இலக்கினை வலுவூட்டி, உலகம் முழுவதும் செயல்படும் முதலாவது சரக்கியல் நிறுவனமாக Deutsche Post DHL குழுமம் விளங்குகிறது. 2007ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டளவில் CO2 செயற்திறனை 30%ஆல் மேம்படுத்துவதை இந்த நிறுவனம் குறிக்கோளாக கொண்டுள்ளது.
Deutsche Post DHL குழுமமானது அதன் பெருநிறுவன பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் அதன் விரிவான மூலோபாயத்தின் ஓர் அங்கமாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க GoGreen, உதவிகளை வழங்க GoHelp மற்றும் கல்வியை மேம்படுத்த GoTeach போன்ற பிரிவுகள் மீது கவனம் செலுத்தி வருகிறது.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025