2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சம்பியன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு பெண்கள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.

வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை (24) நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. 15 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியினை எதிர்த்து அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி மோதியது.

இதில் முதல் பாதியாட்டத்தில் அராலி சரஸ்வதி அணி 10:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய அராலி சரஸ்வதி அணி 09:05 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

இறுதியில் 19:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் அராலி சரஸ்வதி வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--