Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹசைன்)
அரசாங்கம் தமது கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதனால் தாதியர் சங்கங்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இன்று திங்கட்கிழமை இலங்கை முழுவதும் மூன்று மணி நெர வெளிநடப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு நடவடிக்கை பூரண வெற்றி பெற்றதாக அரசாங்க தாதிய சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்தது.
மூன்று நாட்களுக்குள் அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்ப்பதாகவும், தவறின் தமது புதிய எதிர்கால நடவடிக்கைகளை தாம் அறிவிப்பர் என சங்கம் அறிவித்துள்ளது.
வெளிநடப்பு பூரண வெற்றியளித்துள்ளதுடன் பிரதான, மாகாண வைத்தியசாலைகளில் வழமையான சேவைகள் நிறுத்தப்பட்டன என தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
அவசர சிகிச்சை பிரிவு, அவசர சத்திர சிகிச்சைகள், பிரசவ அறைக் கடமைகள் நிறுத்தப்பட்ட போதும், வெளிநடப்பு காரணமாக 150 சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டதாக சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
தாதியர்களின் வெளிநடப் பெரியளவில் தாக்கம் எதையும் விளைவிக்கவில்லை. தாதியர் சேவை யாப்பை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அனுப்பியுள்ளதாகவும், யாப்பு திருத்தங்களினால் எவரும் நியாயம் தவறி நடத்தப்பட்டமாட்டார்கள் எனவும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
50 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago