Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு வாழ் பொதுமக்கள் சார்பில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடந்த 2024 நவம்பர் 26 ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், விசேட துஆ பிராத்தனையும் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (06) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி ஐந்து மாணவர்களை உயிருடனும், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி 06 மாணவர்கள் அடங்களாக 08 பேரின் ஜனாஸாக்களை மீட்கவும் இயற்கை சீற்றங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு களப்பணி செய்த மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல் வள மீனவர் கூட்டுறவு சங்கம், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, காரைதீவு இராவணா அமைப்பு போன்றன இதன்போது கௌரவிக்கப்பட்டது.
அனர்த்தம் மற்றும் சமூக சேவைகள் தொடர்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதுடன் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனை இப்பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், நம்பிக்கையளர் சபை ஆலோசகர் ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ் உள்ளடங்களாக நம்பிக்கையளர் சபையினர், ஜமாஅத்தார் என பலரும் கலந்து கொண்டனர்.
3 minute ago
8 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
12 minute ago
13 minute ago