Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக்கின் தலைமைத்துவம் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தத் தொடர் ஆரம்பத்திலேயே, இத்தொடர் முடிவில் பதவி விலகலாம் என்ற சமிக்ஞையை, குக் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது, தொடர் தோற்கப்பட்டுள்ளதோடு, 10 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய குக், 36.9 என்ற சராசரியில் 369 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இது, ஓரளவு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது என்ற போதிலும், அனுபவ வீரராக, அவரிடமிருந்து இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.
போட்டி முடிவில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், கடந்த 12 மாதங்களில், இங்கிலாந்தின் டெஸ்ட் முன்னேற்றம், மந்தமடைந்துள்ளது போன்று காணப்படுவதாக் தெரிவித்தார். இவ்வாண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையிலேயே, அந்த விமர்சனத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இந்திலையில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் தலைவர் மைக்கல் வோண், "அணி மந்தமடைந்துள்ளது என அணித்தலைவர் கூறும் போது, புதிய பாதையொன்று, வெகு தொலைவில் இல்லை" என்றும் "மனரீதியாக இங்கிலாந்து அணி, போதுமானளவு உறுதியுடன் இல்லை" எனவும் குறிப்பிட்டார். அவரது கருத்துத் தொடர்பாக விமர்சனம் முன்வைக்கப்பட்ட போது, "நீங்கள் வேண்டியளவு சாக்குப் போக்குகளை வைக்கலாம். 8 தோல்விகள், இந்த அணியைப் பொறுத்தவரை போதாத ஒன்று" என்றார்.
கருத்துத் தெரிவித்த மற்றொரு முன்னாள் தலைவரான கெவின் பீற்றர்சன், "'அணியானது அவருக்குப் பின்னால் உள்ளது', 'அவர் தான் இன்னமும் எங்களின் தலைவர்', 'இங்கிலாந்துக்கு எது சரியானதோ, அதை அவர் செய்வார்' போன்ற, சில்லறைத்தனமான ஊடகத் தொடர்பாடல் கதைகளை எதிர்பார்க்கலாம்" எனக் கேலி செய்தார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிரஹாம் ஒனியன்ஸ், "மிகவும் கடினமான இந்தத் தொடரைத் தொடர்ந்து, மிகவும் கடினமான சில கேள்விகளுக்கு, குக் பதிலளிக்க வேண்டும். இந்திய அணி, மிகவும் சிறப்பாக விளையாடியது. குக் ஒரு ஜாம்பவான். அவருக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
எனினும் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணியின் உப பயிற்றுநர் போல் ஃபப்ரேஸ், "அணியின் ஆதரவு, அவருக்கு இன்னமும் உண்டு என்பதை நாம் அறிவோம். அவர் மிகவும் பிரபலமான ஒருவர், பிரபலமான தலைவர். அவர் பதவி விலகுவாரெனில், அது மிகவும் கவலைதரும் ஒன்றாக அமையும், ஏனெில் அவர் தொடர்ந்து செல்ல வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு" என்று குறிப்பிட்டார்.
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago