Editorial / 2020 மே 20 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ, ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (19) ஏற்பட்ட வெள்ளம், காற்று, மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக, இம்மாவட்டத்தில் 17 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோதாகம தெரிவித்தார்.
இது தொடர்பாக, இன்று (20) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, ஓப்பநாயக்க, எஹலியகொடை, அயகம, எம்பிலிபிட்டிய, இரத்தினபுரி, காவத்தை, கிரியெல்ல, கலவான, எலபாத்த, நிவித்திகல, இம்புல்பே, பலாங்கொடை, கொலோன்ன, வெலிகபொல, குருவிட்ட, கொடக்கவெல போன்ற 17 பிரதேச செயலகப் பிரிவுகளிலே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேற்படி அனர்த்தங்கள் காரணமாக, 2,055 குடும்பங்களைச் சேர்ந்த 7,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 1,345 குடும்பங்களை சேர்ந்த 5,507 பேர் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago