மொஹொமட் ஆஸிக் / 2020 ஜூன் 09 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தின் வல்லுநர்கள் அதிகம் பேசி வந்த சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் கறைந்துவிட்டது என, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெவல தெரிவித்துள்ளார்.
கலகெதர தேர்தல் தொகுதியின் பொதுஜன முன்னணி அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம், நேற்று (08) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஆணைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறும் அளவுக்கு வந்துவிட்டது என்றால், அந்த ஆணைக்குழுவின் மீது, பொதுமக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பர் என்று கேள்வி எழுப்பிய அவர், 19ஆவது திருத்தம் பற்றி பெரிதாக புகழ்ந்து, சுயாதீனம் என்று கூறிக்கொண்ட எதிரணியினர், இன்று நிர்வாணமாகிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago