Editorial / 2020 மே 20 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் அனைத்தும் கதையாடல்களே என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், இன்று (20) தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜுக்கு, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், தேசிய தொழிலாளர் சங்கத்தினுள் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பில் இன்று (20) கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில், பல தகவல்கள் வெளியாகி வருவதாகவும் ஆனால் அதுபோன்ற எதுவும் நடைபெறவில்லை என்றும் இவை அனைத்தும் கதையாடல்களே என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகரை, கட்சியில் இருந்து வெளியேற்றப் போவதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago