Editorial / 2020 மே 26 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கமே, மக்கள் மீது வரி சுமைகளைத்திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் இன்று (26) விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு சலுகைகளை வழங்கவேண்டிய இக்காலகட்டத்தில் 5,000 ரூபாயை வைத்து, அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, தற்போது அத்தியாவசிய பொருள்களின் விலையையும் அதிகரித்து அப்பாவி மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய உற்பத்திகளை பாதுகாக்கவே, இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரசாங்கம் அம்புலி மாமா கதை கூறி வருவதாகவும் எவ்வாறாயினும் உள்நாட்டு விவசாயிகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
33 minute ago
42 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
48 minute ago
57 minute ago