Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை நகரப் பிரதேசத்தில், கடந்த சில தினங்களாக 20 பேரைக் கடித்துக் காயப்படுத்திய கட்டாகாலி நாயை, நகரசபை ஊழியர்கள் பிடித்துள்ளனர்.
பலாங்கொடை நகரசபை நிர்வாகம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்களுடன் சேர்ந்து, சில தினங்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த நாய் பிடிக்கப்பட்டுள்ளது.
நீர்வெறுப்பு நோயால் இந்நாய் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளமையால், இந்த நாயின் கடிக்கு உள்ளான அனைவரும், வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு, பொதுசுகாதார உத்தியோகத்தர்கள், அறிவித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட இந்நாய், தற்காலிகமாக நகரசபை பாதுகாப்புக் கூண்டொன்றில் வைத்திய பரிசோதனைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளது என, பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
32 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago