2025 மே 19, திங்கட்கிழமை

காதலில் சிக்கிய அசின்...!

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிவூட்டில் செட்டிலான நடிகை அசின், தற்போது மைக்ரோமெக்ஸ் செல்போன் நிறுவன தலைவர் ராகுல் ஷர்மாவை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் செட்டிலாகி இந்தி திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அசின். அவர் கடைசியாக நடித்த கிலாடி 786 படம் கடந்த 2012ஆம் ஆண்டு ரிலீஸானது.

இதையடுத்து தற்போது தான் ஆல் இஸ் வெல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அசினுக்கு பொலிவூட்டில் வாய்ப்புகள் ஒன்று வந்து குவியவில்லை. இந்நிலையில் அவர் தனக்கு பொருத்தமான, முக்கியத்துவம் உள்ள நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்து வருகிறார்.

அசினுக்கு வெளிநாட்டில் காதலன் இருப்பதாகவும், அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதாகவும் வடநாட்டு பத்திரிக்கைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாகின.

அசினும், மைக்ரோமெக்ஸ் செல்போன் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் டைரக்டர் ராகுல் ஷர்மாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஓவர் நெருக்கமாம்.

10 மாதங்களுக்கு முன்பு அசினும், ராகுலும் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருந்து அவர்களுக்கு இடையேயான நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.

அசின் தனது பிறந்தநாளையொட்டி தனக்கு நெருக்கமானவர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் ஸ்பெஷல் விருந்தினர் யார் என்று பார்த்தால் அது ராகுல் ஷர்மா தானாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X