Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1065 – இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.
1308 – ஜப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது.
1659 – மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன.
1768 – தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது.
1835 – ஒசியோலா தனது செமினோலே படையினருடன் புளோரிடாவில் அமெரிக்க இராணுவத்திற்கெதிரான இரண்டாம் செமினோலே போரை ஆரம்பித்தார்.
1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836 – மெக்சிகோவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1846 – அயோவா அமெரிக்காவின் 29ஆவது மாநிலமாக இணைந்தது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுகளுக்கு உரிமை கோரியது.
1879 – ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.
1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் 30,000 ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை.
1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன் முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.
1908 – இத்தாலி, சிசிலியில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் உயிரிழந்தனர்.
1929 – சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.
1948 – அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது.
1956 – கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங், துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர் மலாயா அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மலாயா, பாலிங் நகரில் கூடினர்.
1958 – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1989 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.
1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண், இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுப் படைகள் சோமாலியா தலைநகர் மொகதிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
2014 – இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் நார்மன் அத்திலாந்திக் என்ற கப்பல் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காணாமல் போயினர்.
2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.
2020- தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்ஷ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனி மாவட்டம் வேண்டும் என்ற மக்களின் கால் நூற்றாண்டு காலகனவு நனவானது.
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025