Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

லோதா பரிந்துரைகளை நிறைவேற்றாவிட்டால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, மாநில கிரிக்கெட் சங்கங்கங்களின் அனைத்து நிர்வாகிகளும் வெளியேற்றப்பட வேண்டுமென்ற லோதா குழுவின் புதிய முன்மொழிவில், கருத்திற் கொள்ளப்படும் முடிவொன்றை இந்திய உச்ச நீதிமன்றம் எடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உள்ளது.
புதிதாக நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட மேற்படி ஆலோசனைகள், கடந்த வெள்ளிக்கிழமை (18) நீதுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட லோதாக் குழுவின் மூன்றாவது நிலையறிக்கையின் ஓர் அங்கம் ஆகும். இவ்வாண்டு ஜூலை 18ஆம் திகதி, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்வின் மூலம் அனுமதிக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தெளிவான எல்லை காணப்பட்டும், குறித்த உத்தரவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் மாநில சங்கங்களும் கீழ்ப்படியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்த லோதா குழு, தொடர்ந்து அவை முரண்டுபிடிப்பதாக கூறியுள்ளது.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, தனது நிலையினை மாற்றாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சில உயர் நிர்வாகிகளும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனினும், நீண்ட காலமாகக் காணப்படும் இவ்வேறுபாட்டுக்கான தீர்வொன்றுக்கு வரும் பொருட்டு, லோதாக் குழுவுடன் கலந்துரையாடலொன்றை நடத்த தயாராகவிருக்கின்றனர்.
26 minute ago
35 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
41 minute ago
50 minute ago