2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹமில்டன் டெஸ்ட்டில் டெய்லர் விளையாடுவார்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 23 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில், நியூசிலாந்து அணியின் சிரேஷ்ட வீரரான றொஸ் டெய்லர் பங்கேற்கலாம் என கண் நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமில்டனில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியானது, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறெனினும், டெய்லரின் இடது கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பாகிஸ்தான் அணியுடனான மேற்படி டெஸ்ட் போட்டி முடிந்ததும், டெய்லருக்குச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த சத்திர சிகிச்சை காரணமாக ஆறு வாரங்களுக்கு டெய்லர் போட்டிகளில் தவற விடுகின்றார். ஆகையால், அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் டெய்லர் விளையாட முடியாது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .