Kogilavani / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியை ஜீரணிக்கமுடியாத விஷமிகளே, வீதியோர விளம்பரப் பலகையை சேதமாக்கியுள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் இராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில், புதிய விளம்பரப் பலகை வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரத்தில் வைக்கப்பட்டிருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வீதியோர விளம்பரப் பலகை, இனந்தெரியாத நபர்களால் நேற்றுத் திங்கட்கிழமை கிழிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிவகுமார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராஜமாணிக்கம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'தமிழ் முற்போக்குக் கூட்டணி, மலையகம் முழுவதிலும் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத சில விஷமிகளே, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டக்கலையில் வைக்கப்பட்டிருந்த த.மு.கூவின் வீதியோர விளம்பரப் பலகையை விஷமிகள் கிழித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர் ப.திகாம்பரத்தின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் புதிய விளம்பரப் பலகையை வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என அவர் மேலும் கூறினார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago