2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அரச துறையை சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு இலத்திரனியல் சுற்று செயலமர்வுகள்

A.P.Mathan   / 2013 மே 08 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி இலத்திரனியல் வயர் தயாரிப்பு நிறுவனமாக திகழும் களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக நாட்டின் அரச துறையை சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளுக்கென செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த செயலமர்வுத்தொடரின் முதலாவது அமர்வு அண்மையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பொறியியலாளர் சமீர இந்துனில் விக்ரமசிங்க மற்றும் மாவட்ட செயலக அலுவலகத்தின் பிரதம கணக்காளர் டபிள்யு.ஏ.ஆரியசேன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 
 
இந்த செயலமர்வில் 52 தொழில்நுட்ப அதிகாரிகள் பங்குபற்றியிருந்ததுடன், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தை சேர்ந்த பொறியியலாளர்களின் மூலம் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த செயலமர்வில் கட்டிடத்தின் விதங்கள் மற்றும் பயன்பாடுகள், மின்சுற்றின் வலுக்கேள்விக்கு அமைய வயர்களின் கணக்கீடு, தரக்கோட்பாடுகள் மற்றும் கேபிள்களின் தரங்கள், இலத்திரனியல் சுற்றுக்களின் பாதுகாப்பான நிறுவல்கள் போன்ற விடயங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
 
மாவட்ட பொறியியலாளர் சமீர இந்துனில் விக்ரமசிங்க இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்திருந்தார். செயலமர்வை தொடர்ந்து ஊடகவியலாளாகளுக்கு கருத்து தெரிவிக்கையில், 'நாட்டில் நிலவும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அமைவாக, பொது துறையை சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகள் பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் எனும் வகையில், நாம் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொண்டு, எமது நாளாந்த செயற்பாடுகளில் அவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தனியார் துறையிடமிருந்து இந்த அறிவை பெற்றுக் கொள்வது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது. இந்த செயலமர்வுக்காக ஹம்பாந்தோட்டை போன்ற பகுதியை தெரிவு செய்திருந்தமையானது மிகவும் வரவேற்கத்தகுந்த விடயமாகும். எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற திட்டங்களை நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் சமூக அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதில் இலத்திரனியலாளர்களை, இலத்திரனியல் பொறியியலாளர்களை மற்றும் நிர்மாணத்துறை நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு விளக்கங்களை வழங்கும் வகையில் அமைந்த செயமர்வுகளை ஏற்பாடு செய்து வருகிறோம். கடந்த காலங்களில் நாம் பெருமளவு தனியார் துறை நிறுவனங்கள் மீதே அதிகளவு அக்கறை செலுத்தியிருந்தோம். தற்போது முதல் தடவையாக அரச துறையின் மீது எமது அக்கறையை செலுத்த முன்வந்துள்ளோம். தற்போது அரசதுறையானது பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தொழில்நுட்ப அதிகாரிகள் இந்த திட்டங்களில் பிரதான பங்கை வகிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் துறையை போலவே அரச துறையிலும் எமது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான தேவை எழுந்துள்ளது. ஹம்பாந்தோட்டை பகுதியில் பெருமளவான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் எமது செயலமர்வை முன்னெடுக்க தீர்மானித்தோம். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த செயலமர்வுகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். தமது மாவட்டங்களில் இந்த செயலமர்வை முன்னெடுக்க விரும்பும் அரச அதிகாரிகள் எம்மை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.  
 
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5 S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இல்த்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .