2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தொடர்ந்து ஏழு நாட்கள் பங்குகொடுக்கல் வாங்கல்கள் அதிகரிப்புடன் நிறைவு

A.P.Mathan   / 2013 மே 12 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
 
(ச.சேகர்)
 
கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடையும் பொழுது, தொடர்ச்சியான ஏழு தினங்கள் அதிகரித்த நிலையில் நிறைவடைந்திருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்தவாரம் இடம்பெற்ற மொத்த கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து காணப்பட்டதுடன், மொத்த பங்கு புரள்வு பெறுமதி மூன்று மடங்காலும் அதிகரித்து காணப்பட்டது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,250.00 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3530.90 ஆகவும் அமைந்திருந்தன. 
 
மே 06ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 10,597,177,691 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 74,801 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 72,134 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,667 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் லங்கா செரமிக், சிலோ ஃபினான்ஸ், கெல் ஃபினான்ஸ், மொரிசன்ஸ் மற்றும் பிம்புத் ஃபினான்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
செலின்சிங், மேர்க். சிப்பிங், சிலோன் லெதர் (வாக்குரிமை), ஹபுகஸ்தென்ன மற்றும் மிரமர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,400 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 43,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.59 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 197.43 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .