2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உகண்டா ஆடைத்தொழிற்துறையில் முதலீடு செய்ய இலங்கைக்கு அழைப்பு

A.P.Mathan   / 2013 மே 14 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் திகழும் உகண்டாவில் ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு உகண்டா அழைப்புவிடுத்துள்ளது. உகண்டாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதிக்கும், உகண்டா நாட்டின் ஜனாதிபதி யொவேரி முசேவெனிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் நீர் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள உகண்டா நாட்டின் ஜனாதிபதி, நாட்டின் மொத்த பருத்தி உற்பத்தியில் 5 வீதம் மாத்திரமே உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
 
உகண்டாவை பொறுத்தமட்டில் எண்ணெய் அகழ்வு, குழாய் கட்டமைப்பு நிர்மாணம், களஞ்சியப்படுத்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்ற நடவடிக்கைகளுக்கான சிறந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. 
 
உகண்டாவின் மசுலிட்டா தொழிற்பயிற்சி நிலையத்தை மெருகேற்றம் செய்ய இலங்கை 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க வாக்குறுதியளித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .