Editorial / 2018 மார்ச் 09 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவு, பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில், பொல்லால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில், இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டவரின் தந்தையும் மற்றும் மைத்துனர் உறவுமுறையுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகன் சிவசூரியன் (வயது 38) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், கொலைசெய்யப்பட்டவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தந்தையிடம் சண்டையிட்டுள்ளார் என்றும் இருவருக்கும் இடையிலான முறுகல் நிலையே, கொலைக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago