Editorial / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை பிரிங்வெளி தோட்ட அதிகாரி மீதான தாக்குதலைக் கண்டித்து, மேற்படி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், இன்று வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிங்வெளி தோட்ட நிருவாகியான நுவன் தரங்க என்பவர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்டத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து, கோட்டகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸார் இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்ட அதிகாரி மீதான தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரியே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago