Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடு திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்ற தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஸ்தாபகர் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ, அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் மடு அன்னையின் ஆசி பெற்றனர். (R)
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago