2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா மரணங்கள் 225 ஆக அதிகரிப்பு

Editorial   / 2021 ஜனவரி 08 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் மரணம், மொத்தம் 225 ஆக உயர்ந்தது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-14​ஐச் சேர்ந்த 75 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில், ரம்புக்கனை மாவட்ட வைத்தியசாலையக்கு மாற்றப்பட்டார். அதன்​பின்னர் தேசிய தொற்றுநோய்ப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ​இன்று (08) மரணமானார்.

அவரது மரணத்துக்கு இரத்தம் நஞ்சானமை மற்றும் கொவிட் நிமோனியா ஆகியன​வே காரணங்களாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவர், ​நேற்றுமுன்தினம் (07) மரணமடைந்தார். அவரும் கொவிட் நிமோனியாவினால் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஹொரனயை வசிப்பிடமாக்க கொண்ட 87 வயதான பெண்ணொருவரும் ஜனவரி 6ஆம் திகதியன்று மரணமடைந்தார். கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்தே அவர், மரணமடைந்துள்ளார் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X