Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஸ
அனுமதிப்பத்திரமின்றி புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக ஒருதொகை மதுபான போத்தல்களை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி ஹற்றன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை கெம்பியன் நகரத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காகவே, இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது, 71 போத்தல்கள் மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட தினமே பொலிஸாரல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago