Editorial / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், டி.சந்ரூ
நானுஓயா - கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில், நேற்று மாலை பெய்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக அங்குள்ள மூன்று தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
குறித்த குடியிருப்புகளின் கூரைகள், காற்றில் அள்ளுண்டுச் சென்றுள்ளதாகவும் குடியிருப்புகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர், தோட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மாலை வேளைகளில் இடி மற்றும் கடுங் காற்றுடன் கூடிய மாலை பெய்வதால், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
37 minute ago
55 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago
5 hours ago