டி.சந்ரு / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியாங்கனையில் இருந்து ஹட்டனுக்கு 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – ஹட்டன், நானுஓயா குறுக்கு வீதியில், நேற்றைய தினம் (04) குறித்த லொறி வீதியை விட்டு விலகி, மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியின் சாரதி, லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றபோது, கட்டுப்பாட்டுக்கு அப்பால் லொறி வீதியை விட்டு விலகிச் சென்றதால் விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
36 minute ago
54 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
5 hours ago