Editorial / 2018 மார்ச் 29 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவு, நேற்று (28) காலை இடம்பெற்றபோது, அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களானது, மஸ்கெலியா பொலிஸாரின் ஆதரவுடனேயே இடம்பெற்றது என்ற தெரிவித்த மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆராஜக அரசியல் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி பிரதேச சபைக்கான வாக்கெடுப்பின்போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர், இ.தொ.காவினரால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்தப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது, நேற்றுப்பெய்த மழையில் தோன்றிய காலான் அல்ல. ஆகவே, ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமாக இருந்த இ.தொ.காவுக்கு, நபர்களை கடத்தியோ அல்லது மறைத்து வைத்தோ அரசியல் செய்ய வேண்டிய தேவைக்கிடையாது. குறித்த ஐ.தே.க பெண் உறுப்பினர், தனக்கு சுகயீனம் காரணமாகவே வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், எங்களது கட்சி அமோக வெற்றிப்பெற்று, பெரும்பான்மையான பிரதேசசபையின் தலைவர் பதவிகளை தக்கவைத்துக்கொண்டு வருகின்றது.
“இந்நிலையில் மலையகத்தின் மாற்றம், நாங்கள் தான் என மார்த்தட்டிக்கொண்டிருந்தவர்களை, மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
“இதன்படி, மஸ்கெலியாவில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸாரின் ஆதரவுடன் இ.தொ.காவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளமையானது, வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்” என்று தெரிவித்தார்.
37 minute ago
55 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago
5 hours ago