Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி புனித சில்வெஸ்தர் கல்லூரிக்கும், வித்தியார்த்த கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த, பர்டி நில்லகொட மற்றும் பீ.எம்.ஐ.பண்டா ஞாபகார்த்த ரக்பி போட்டி, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி, பல்லேகலேயில் அமைந்துள்ள, திருத்துவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு, நேற்று (28) மாலை, கண்டி சில்வெஸ்தர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி போட்டி தொடர்பாக, புனித சில்வெஸ்தர் கல்லூரியின் அதிபர் பீ.ஜீ.எஸ். பண்டார பேசுகையில், கண்டி புனித சில்வெஸ்தர் கல்லூரிக்கு பாரிய சேவையாற்றிய முன்னாள் அதிபர் பர்டி நில்லகொடவும், வித்தியார்த்த கல்லூரிக்கு பாரிய சேவையாற்றிய பீ.எம்.ஐ.பண்டா அவர்களதும் ஞாபகார்த்தமாக, இப்போட்டி இடம் பெற்று வருவதாக தெரிவித்தார்.
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago