Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - டிக்கோய நகரசபைக்கான புதியத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சடயன் பாலசந்திரனும் உப தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஜே.பாமிஸூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதியத் தலைவருக்கான வாக்கெடுப்பின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரனுக்கு 8 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகுமுத்து நந்தகுமாருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனையடுத்து சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு, பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இறுதியில் இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பதால் குழுக்கள் முறையின் மூலம், சடயன் பாலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் உப தலைவர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ஏ.ஜே.எம்.பாஹிம்ஸூம் இ.தொ.காவின் சார்பில் குமார கருணாசிறியும் போட்டியிட்ட நிலையில், ஏ.ஜே.எம்.பாஹிம் உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
19 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
38 minute ago