Freelancer / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
திருகோணமலை - 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4 பேரும் அகதிகளாக இன்று (13) காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று (13) அதிகாலை ராமேஸ்வரம் வந்திறங்கினர்.
ராமேஸ்வரம் வந்த இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
இதனை அடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்து ள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் நால்வரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (R)
19 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
44 minute ago